காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் கிராமங்கள் தோறும் கட்சிக்காக பாடுபட வேண்டும்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ வேண்டுகோள்

 

கும்மிடிப்பூண்டி, ஜன. 1: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் கிராமங்கள் தோறும் கட்சிக்காக பாடுபட வேண்டுமென துரை சந்திரசேகர்எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் பொன்னேரி – கும்மிடிப்பூண்டி சார்பாக நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

பேரூர், வட்டாரத் தலைவர் பிரேம்குமார் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சம்பத், திருவள்ளூர் வடக்கு மாவட்ட துணை தலைவர் மதன் மோகன், மாவட்ட பொருளாளர் மனவாளன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஜோதி சுதாகர், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் பெனிஸ், மாவட்ட பொது செயலாளர்கள் கும்புளி மணி, அர்ஜுன் ராஜ், கண்ளூர் மதன், மாவட்ட செயலாளர்கள் மங்காவரம் ஜெயபாலன், சித்ரா, இனியன் சேகர் மற்றும் ரமேஷ்குமார், ஹேமகுமார், தேவைம்பேடு சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேசுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வீடுகள் தோறும் சென்று காங்கிரஸ் ஆட்சி கொண்டு வர, தொண்டர்கள் கிராமங்கள் தோறும் கட்சிக்காக பாடுபட வேண்டும், 100 நாள் வேலை திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகளை சேகரிக்கவும் அத்தோடு கட்சிக்கு நிதி திரட்டவும் பேசினார். முடிவில் மாவட்ட ஓபிசி தலைவர் பெனிஸ் நன்றியுரை ஆற்றினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை