காங்கிரசுக்கு கும்பக்கோணம் மாநகராட்சி மேயர் பதவி திமுக கூட்டணி கட்சிகளுக்கான போட்டியிடும் பதவிகள் ஒதுக்கீடு: காஞ்சிபுரம், சேலம்-காங்கிரஸ்; ஆவடி-மதிமுக; மதுரை-மார்க்சிஸ்ட்; திருப்பூர்-இந்திய கம்யூ,; கடலூர்-விசிக; நகராட்சி, பேரூராட்சிகளிலும் பதவிகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். கும்பக்கோணம் மாநகராட்சி மேயர் பதவி, சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டுக்கு மதுரை துணை மேயர், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு திருப்பூர் துணை மேயர், மதிமுகவுக்கு ஆவடி துணை மேயர், விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 90 சதவீதத்துக்கு மேல் வெற்றி பெற்றனர். அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று நடக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான இடங்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.இது தொடர்பாக திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர்-நகராட்சித் தலைவர், துணைத் தலைவர்- பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திமுக தலைவரும்- முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பட்டியல் வெளியிடப்படுகிறது.இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர்-தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி துணை மேயர்- சேலம்- சேலம் மாவட்டம், காஞ்சிபுரம்- காஞ்சிபுரம் மாவட்டம். நகராட்சி தலைவர் பதவி- தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம், தேனி- தேனி மாவட்டம், காங்கேயம்-திருப்பூர் மாவட்டம், சுரண்டை-தென்காசி மாவட்டம், கருமத்தம்பட்டி-கோவை மாவட்டம், கோபிசெட்டிபாளையம்-ஈரோடு மாவட்டம்.நகராட்சி துணைத் தலைவர் பதவி- கூடலூர்- நீலகிரி மாவட்டம், ஆரணி-திருவண்ணாமலை மாவட்டம். நரசிங்கபுரம்-சேலம் மாவட்டம், காரமடை-கோவை மாவட்டம், குடியாத்தம்-வேலூர் மாவட்டம், திருவேற்காடு-திருவள்ளூர் மாவட்டம், குன்றத்தூர்-காஞ்சிபுரம் மாவட்டம், தாராபுரம்-திருப்பூர் மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை மாவட்டம்.பேரூராட்சி தலைவர் பதவி: மங்களம்பேட்டை-கடலூர் மாவட்டம், சின்னசேலம்-கள்ளக்குறிச்சி மாவட்டம், வடுகப்பட்டி-தேனி மாவட்டம், பூலாம்பட்டி-சேலம் மாவட்டம், பிக்கட்டி-நீலகிரி மாவட்டம், பேரையூர்-மதுரை மாவட்டம், பட்டிவீரன்பட்டி-திண்டுக்கல் மாவட்டம், திருபெரும்புதூர்-காஞ்சிபுரம் மாவட்டம். பேரூராட்சி துணைத் தலைவர் பதவி: சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி மாவட்டம், ஜகதால-நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா-நீலகிரி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி-திருநெல்வேலி மாவட்டம், கன்னிவாடி-திருப்பூர் மாவட்டம், நங்கவல்லி-சேலம் மாவட்டம், கருப்பூர்-சேலம் மாவட்டம், டி.என்.பாளையம்-ஈரோடு மாவட்டம், நாட்றாம்பள்ளி-திருப்பத்தூர் மாவட்டம், உடையார்பாளையம்-அரியலூர் மாவட்டம், கணியூர்- திருப்பூர் மாவட்டம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: மாநகராட்சி துணை மேயர்: மதுரை-மதுரை மாவட்டம், நகராட்சி தலைவர்- திருமுருகன்பூண்டி-திருப்பூர் மாவட்டம், கொல்லன்கோடு-கன்னியாகுமரி மாவட்டம். நகராட்சி துணைத் தலைவர்- திருத்துறைப்பூண்டி-திருவாரூர் மாவட்டம், சிதம்பரம்- கடலூர் மாவட்டம், பழனி-திண்டுக்கல் மாவட்டம்.பேரூராட்சி தலைவர்: பெரியநாயக்கன்பாளையம்-கோவை மாவட்டம், வீரவநல்லூர்-திருநெல்வேலி மாவட்டம், அந்தியூர்-ஈரோடு மாவட்டம். பேரூராட்சி துணைத் தலைவர்- வடமதுரை-திண்டுக்கல் மாவட்டம், தொட்டியம்-திருச்சி மாவட்டம், பண்ணைப்புரம்-தேனி மாவட்டம், கீரனூர்-புதுக்கோட்டை மாவட்டம், தளி-திருப்பூர் மாவட்டம், தேவர்சோலை-நீலகிரி மாவட்டம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: மாநகராட்சி துணை மேயர்- திருப்பூர்-திருப்பூர் மாவட்டம். நகராட்சி தலைவர்- கூத்தாநல்லூர்-திருவாரூர் மாவட்டம். நகராட்சி துணைத் தலைவர்- பவானி-ஈரோடு மாவட்டம், புளியங்குடி-தென்காசி மாவட்டம், அதிராம்பட்டினம்-தஞ்சாவூர் மாவட்டம், போடிநாயக்கனூர்-தேனி மாவட்டம். பேரூராட்சி தலைவர்- வத்திராயிருப்பு-விருதுநகர் மாவட்டம், பூதப்பாண்டி-கன்னியாகுமரி மாவட்டம், சிவகிரி-தென்காசி மாவட்டம், புலியூர்-கரூர் மாவட்டம். பேரூராட்சி துணைத் தலைவர்- கூத்தைப்பார்-திருச்சி மாவட்டம், ஊத்துக்குளி-திருப்பூர் மாவட்டம், மேலசொக்கநாதபுரம்-தேனி மாவட்டம், கீரமங்கலம்-புதுக்கோட்டை மாவட்டம், சேத்தூர்-விருதுநகர் மாவட்டம், ஜம்பை-ஈரோடு மாவட்டம்.மதிமுக: மாநகராட்சி துணை மேயர்-ஆவடி- திருவள்ளூர் மாவட்டம், நகராட்சி தலைவர்- மாங்காடு-காஞ்சிபுரம் மாவட்டம், நகராட்சி துணைத் தலைவர்- பரமக்குடி-ராமநாதபுரம் மாவட்டம், கோவில்பட்டி-தூத்துக்குடி மாவட்டம், குளித்தலை-கரூர் மாவட்டம். பேரூராட்சி தலைவர்- திருவேங்கடம்-தென்காசி மாவட்டம், ஆடுதுறை-தஞ்சாவூர் மாவட்டம், சென்னசமுத்திரம்-ஈரோடு மாவட்டம். பேரூராட்சி துணைத் தலைவர்- பாளையம்-திண்டுக்கல் மாவட்டம், அவல்பூந்துறை-ஈரோடு மாவட்டம், அரச்சலூர்-ஈரோடு மாவட்டம்.விடுதலை சிறுத்தைகள் கட்சி: மாநகராட்சி துணை மேயர்- கடலூர்-கடலூர் மாவட்டம். நராட்சி தலைவர்- ஜெயங்கொண்டம்-அரியலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம்-கடலூர் மாவட்டம். நகராட்சி துணைத் தலைவர்- திண்டிவனம்- விழுப்புரம் மாவட்டம், பெரியகுளம்-தேனி மாவட்டம், ராணிப்பேட்டை-ராணிப்பேட்டை மாவட்டம். பேரூராட்சி தலைவர்- பெண்ணாடம்-கடலூர் மாவட்டம், காடையாம்பட்டி-சேலம் மாவட்டம், பொ.மல்லாபுரம்-தருமபுரி மாவட்டம். பேரூராட்சி துணைத் தலைவர்- கடத்தூர்-தர்மபுரி மாவட்டம், திருப்போரூர்-செங்கல்பட்டு மாவட்டம், புவனகிரி-கடலூர் மாவட்டம், கொளத்தூர்-சேலம் மாவட்டம், வேப்பத்தூர்-தஞ்சாவூர் மாவட்டம், அனுமந்தன்பட்டி-தேனி மாவட்டம், ஓவேலி-நீலகிரி மாவட்டம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இடங்கள், பதவிகள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கூட்டணி கட்சியினர் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.* திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் திமுக வேட்பாளர்கள்: துரைமுருகன் அறிவிப்புசென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: இன்று நடைபெற உள்ள நகராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி-டாக்டர் பரிமளம், திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூந்தமல்லி-காஞ்சனா சுதாகர், திருவேற்காடு- இ.கிருஷ்ணமூர்த்தி, திருநின்றவூர்- உஷாராணி. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர்- உதயமலர் பாண்டியன், திருத்தணி- சரஸ்வதி பூபதி. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர்-சத்தியமூர்த்தி, செங்கல்பட்டு- தேன்மொழி, மறைமலை நகர்- சண்முகம், கூடுவாஞ்சேரி-எம்.கே.டி.கார்த்திக். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம்- கே.மலர்விழி குமார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல மற்ற மாவட்டங்களில் திமுக சார்பில் நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு: இன்று நடைபெற உள்ள பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர்- சுமதி, ஊத்துக்கோட்டை-அப்துல் ரஜீத், கும்மிடிப்பூண்டி- ஷகிலா அறிவழகன். திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு-மணிமேகலை. திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருமழிசை-வடிவேலு. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர்-தேவராஜ், திருக்கழுக்குன்றம்- து.யுவராஜ். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர்-சசிகுமார், வாலாஜாபாத்- இல்லாமல்லி ஸ்ரீதர், இடைக்கழிநாடு-லட்சுமி சங்கர், அச்சரப்பாக்கம்- நந்தினி கரிகாலன்.இதேபோல, மற்ற மாவட்டங்களில் திமுக சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை