காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100க்கு விற்பனை

 

காங்கயம், ஜூலை 25:காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது.வாரந்தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள்,பழங்கள்,மளிகைகள்,கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கூடிய வார சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும்,பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை சென்ற வாரத்தை காட்டிலும் ரூ.80 குறைந்து காணப்பட்டது.மேலும் தக்காளியின் விலையும் ரூ.20 குறைந்தது. தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கி இருப்பதால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் வரும் நாட்களில் சின்ன வெங்காயம், தக்காளியின் விலை இன்னமும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்