காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்

காங்கயம், ஜூன் 19: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், திருப்பூர் மாவட்ட தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும் காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண் குழந்தைகளுக்கான போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று காங்கயம்-கரூர் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இம்முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியை குழந்தை தெரசா வரவேற்புரை நிகழ்த்தினார்.

காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் ஜெகதீசன், பன்னீர்செல்வம், மோகன ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் 18 வயதுக்கு கீழ் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு போக்சோ சட்டம் குறித்தும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் திட்டங்கள் பற்றியும், தமிழக அரசின் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இம்முகாமில் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமின் இறுதியில் அறிவியல் ஆசிரியை மேரி கிரேசி நன்றி கூறினார்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்