காங்கயம் இன மாடுகள் ரூ.29 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம்:  காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான நடைபெற்ற சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் விற்பனைக்காக மாடுகளை கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். நேற்று 134 கால்நடைகள் வந்தன. இதில், காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.69 ஆயிரம் வரை விற்பனையானது. பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற சந்தையில் 72 கால்நடைகள் ரூ.29 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர் ….

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு