கவர்னர் உரையை தவிர்க்க கேரள அரசு புதிய முடிவு: கிறிஸ்துமஸ் விழாவை புறக்கணித்தார் முதல்வர்

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் மாநில அரசுடன்  மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இந்த வருட தொடக்கத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய போது கவர்னர் தன்னுடைய உரையை வாசிக்க மறுத்தார். தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்த ஜோதிலால் என்ற ஐஏஎஸ் அதிகாரியை உடனடியாக மாற்றாவிட்டால் உரையை வாசிக்க மாட்டேன் என்று கவர்னர் கூறினார். இதை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஜோதிலால் வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகே ஆரிப் முகம்மது கான் உரையை வாசிக்க முன்வந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் கேரள அரசுக்கும், கவர்னருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் அதிகரித்தது.  ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பேரணியில் வழக்கமாக கவர்னர் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். ஆனால் கடந்த வருடம் பேரணியில் கலந்து கொள்ள கவர்னரை கேரள அரசு அழைக்கவில்லை. இந்நிலையில் நேற்று கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் பினராய் விஜயன், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் முதல்வர் உள்பட யாரும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளவில்லை.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் கையெழுத்து போடமாட்டேன் என்று ஏற்கனவே கவர்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  புதிய பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க வேண்டும். புதிய வருடத்தில் புதிய கூட்டத் தொடர்  தொடங்கும்போது வழக்கமாக கவர்னர் உரை நிகழ்த்த வேண்டும்.  இதைத் தவிர்ப்பதற்காக இந்த கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாக முடிக்காமல் அடுத்த மாதம் இதே கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தினால் கவர்னர் உரை நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை என்பதால் கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது….

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு