கவர்னருக்கு திருஷ்டி பூசணி உடைத்து நடுரோட்டில் போட்ட பணியாளர்

புதுச்சேரி, ஜூன் 20: புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் திருஷ்டி தர்பூசணி உடைப்பவர்களை காவல்துறை எச்சரித்து வருகிறது. இருப்பினும் தொழில் நிறுவனங்கள், வணிக மாளிகைகள், கடைகள் முன்பு திருஷ்டி பூசணி உடைத்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்தாமல் செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனிடையே தெலுங்கானா சென்றிருந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் புதுச்சேரி திரும்பினார். அப்போது அவர் மணக்குள விநாயகர் கோயிலை ஒட்டிய பகுதியில் (செயின்ட் லூயிஸ்வீதி) அமைந்துள்ள பின் வாசல் வழியாக ராஜ்நிவாஸில் செல்ல முயன்றார். அப்போது கவர்னர் மாளிகையில் இருந்த பணியாளர்கள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றி அங்கேயே நடுரோட்டில் உடைத்துள்ளனர். அவற்றை உடனே அப்புறப்படுத்தப்படவில்லை. அவ்வழியாக இருசசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரம ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி லேசாக காயமடைந்தார். மேலும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கவர்னர் மாளிகை முன்பு பூசணிக்காய் சிதறி கிடந்தது குறித்து முணுமுணுத்தபடி சென்றதை காண முடிந்தது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை