கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி தாமதம்: சாலையில் வடிந்தோடும்கழிவுநீரால் மக்கள் அவதி

துவரங்குறிச்சி, ஆக.27: பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டு பஜாரில்துவரங்குறிச்சி சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டு மீன்கடை, கறி கடை, பஜார் அருகில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிக்காக ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு 15 தினங்களாகியும் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் மறு பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் நிரம்பி நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. இதில் துர்நாற்றமும் அதிக அளவில் வீசுவதால் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர் .

மேலும் கழிவுநீர் வாய்க்கால் ஒப்பந்ததாரர் கழிவு நீர் வாய்க்காலை உடனடியாக கட்ட வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில தினங்கள் கழிவு நீர் சாலையில் சென்றால் இப்பகுதியில் நோய் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் வங்கி செயல்பட்டு வருகிறது . வங்கிக்கு ஒரு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட பயனாளர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால் வங்கிக்கு செல்ல பாதை இல்லாததால் வவாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். எனவே இப்பகுதி கழிவுநீர் வாய்க்காலை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் எனவும், சாலையில வடிந்தோடும் கழிவுநீரை சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்