கழிவுநீர் பிரச்னைக்கு நடவடிக்கை: என்.ஆர்.தனபாலன் வாக்குறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இவர், தினமும் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்து வருகிறார். ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்போதும் அப்பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் வேட்பாளரிடம் மனுவாகவும், வாய்மொழியாகவும் கூறுகின்றனர். அதை குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு, நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவுடன் கண்டிப்பாக உங்களது பிரச்னைகளை தீர்த்து வைப்பேன் என உறுதியளித்து வருகிறார்.அந்த வகையில், நேற்று சஞ்சய் நகர் பி.வி.காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்.ஆர்.தனபாலன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சஞ்சய்நகர் பகுதி மக்கள், எங்களது பகுதியில் மழை காலங்களில் கழிவுநீர் சாலைக்கு வந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினர். இதை கேட்ட அவர், தான் வெற்றி பெற்றவுடன் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மளிகைக்கடை, காய்கறிக்கடை களுக்கு நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்….

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்