கழிப்பிட வசதி கேட்டு மகளிர் பள்ளியில் தர்ணா-மாணவிகளின் பெற்றோர் திடீர் போராட்டம்

தர்மபுரி : அடிப்படை வசதிகள் செய்து தரக்ேகாரி, தர்மபுரி அரசு மகளிர் பள்ளியில் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி செந்தில் நகரில் லக்கம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 385 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியை கவிதா உள்பட 19 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனிடையே நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், எஸ்ஐ சுந்தரமூர்த்தி ஆகியோர், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டத்தை கைவிட்ட அவர்களிடம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சென்ற மாணவிகளின் பெற்றோர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கையை நிறைவேற்றக் ேகாரி மனு கொடுத்தனர்….

Related posts

குஜராத் சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை

தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் ரூ60 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பாமகவை சேர்ந்த ரவுடி கொலையில் சிக்கியவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்: திருச்சியில் பரபரப்பு