கள்ளிக்குடி அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பால் பரபரப்பு

கள்ளிக்குடி, ஆக. 9: கள்ளிக்குடி அருகே வேப்பங்குளத்தில் உள்ள மருதூர் அய்யனார் கோயில் மற்றும் சுற்றுப்புறங்களிலிலுள்ள வீடுகள் நீர்பிடிப்பு பகுதியில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் செந்தாமரை, டிஎஸ்பி அருள், இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வந்தனர்.

அப்போது ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கள்ளிக்குடி தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இன்று தலைமை நில அளவையர் மூலம் நில அளவை செய்து நீர்பிடிப்பு பகுதிதான் என உறுதியானால் ஆக்கிரமிப்பு பகுதிகளை அவரவர்களாகவே முன் வந்து அகற்றி கொள்வது என ஏற்று கொள்ளப்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி