கள்ளக் காதல் செய்ததற்காக பணி நீக்கம் செய்ய முடியாது: குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி

அகமதாபாத்: ‘கள்ளக்காதல் என்பது சமுதாயத்தின் பார்வையில் ஒழுங்கீனமானதாக கருதப்பட்டாலும், அதை குற்றமாக கருதி அரசு ஊழியரை பணியில் இருந்து நீக்க முடியாது,’ என்று குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.குஜராத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், தான் வசித்து வந்த காவலர் குடியிருப்பில் உள்ள விதவையுடன் தகாத உறவு வைத்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இதனால், இவர் நடத்தை சரியில்லை என கூறி கடந்த 2013ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர், `விதவைப் பெண்ணும் நானும் மனம் ஒருமித்து தொடர்பில் இருப்பதாக ஒப்புக்கொண்ட பிறகும், காவல் துறை முறையாக விசாரிக்காமல் எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. எந்த சூழலிலும் அப்பெண்ணை ஏமாற்றவில்லை. எனவே, என்னை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்,’ என்று கோரினார்.இந்த வழக்கு நீதிபதி சங்கீதா விஷேன் முன்பு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்த போது, `மனுதாரர் கட்டுப்பாடுகள் நிறைந்த காவல்துறையில் பணி புரிந்தாலும், தகாத உறவு என்பது சமுதாயத்தில் பார்வையில் ஒழுங்கீனமானதாக பார்க்கப்பட்டாலும், அதனை நடத்தை தவறாக கருதி அவரை பணியில் இருந்து நீக்க முடியாது. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அவர் அப்பெண்ணை மிரட்டவோ, பணம் பறிக்கவோ இல்லை. எனவே, நடத்தை விதிகள் 1971க்கும் அவரை பணி நீக்கம் செய்ததற்கும் தொடர்பில்லை. எனவே, அவரது பணி நீக்கத்தை ரத்து செய்வதுடன், அகமதாபாத் காவல்துறை அவரை உடனடியாக பணியமர்த்த வேண்டும். மேலும், பணி நீக்கம் செய்த 2013ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரையிலான காலத்துக்கு ஊதியத்தின் 25 சதவீதத்தை வழங்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!