கள்ளக்காதல் விவகாரத்தில் காய்கறி வியாபாரி கொலை: தந்தை, மகன் கைது

சேலம்: கள்ளக்காதல் விவகா ரத்தில் காய்கறி வியாபா ரியை கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு நார்த்தன்சேடு மலைக்கிராமம் அருகேயுள்ள கும்பிபாடியை சேர்ந்த சின்னகவுண்டர் மகன் சிவக்குமார் (40), காய்கறி வியாபாரி. இவருக்கு அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் மனைவி புஷ்பா (30) என்பவருடன் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியநிலையில், கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த புஷ்பாவின் கணவன் தங்கராஜ் மற்றும் குடும்பத்தினர் சிவக்குமாரை கண்டித்து வந்துள்ளனர். புஷ்பாவையும் கண்டித்துள்ளனர். ஆனால், இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே சிவக்குமார் நின்றுள்ளார். அப்போது தங்கராஜ் மற்றும் அவரது தந்தை மாணிக்கம் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள், சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். மேலும், கத்தியாலும் சிவக்குமாரை வெட்டினர். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார்.இக்கொலை பற்றி ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவான தங்கராஜ் (35), மாணிக்கம் (60) ஆகியோரை நேற்றிரவு கைது செய்தனர். அதில் தங்கராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீசார் கூறியதாவது: தனது மனைவி புஷ்பாவுடன் கடந்த ஓராண்டிற்கு முன் சிவக்குமார் பழகினார். ஆரம்பத்தில் சிரித்து பேசி வந்தநிலையில், இருவரும் தனியாக இருப்பதை பார்த்து, கள்ளத்தொடர்பை அறிந்துக் கொண்டேன். அதன்பிறகு மனைவி புஷ்பாவை கண்டித்தேன். இருந்தாலும் சிவக்குமார், தொடர்பை கைவிட மறுத்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால், அவரை அடித்து கண்டிக்க வேண்டுமென நானும், தந்தை மாணிக்கமும் சென்றோம். தெருவில் நின்ற அவரிடம் என் மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட சொன்னேன். ஆனால், அவர் கேட்காததால் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் அடித்தேன். கத்தியாலும் வெட்டினோம். அவர் படுகாயமடைந்து கீழே விழவும் அங்கிருந்து தப்பினோம். தற்போது அவர் இறந்த நிலையில் சிக்கிக்கொண்டோம்’’ என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது….

Related posts

முன்னாள் காதலியிடம் பேசியதால் ஆத்திரம் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை : பாஜ மாநில துணை தலைவர் மகன் கைது

ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் என பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி மோசடி : இருவர் கைது

சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் பிடிபட்டார்: சொகுசு கார், 47 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்