கள்ளக்காதல் விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு தம்பதி மீது கார் ஏற்றி, அரிவாளால் வெட்டி தாக்கிவிட்டு தப்பிய கும்பல்-ஓட்டல் அதிபர் உட்பட 3 பேர் போலீசில் சிக்கினர்

சூலூர் : சூலூரில், கள்ளக்காதல் தகராறில் தம்பதியர் மீது கார் ஏற்றியும், அரிவாளால்   சரமாரியாக வெட்டியும் கும்பல் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த் (41). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும் உடல்நிலை குன்றிய இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் சூலூர் அருகே அப்பநாய்க்கன்பட்டி புதூரில் உள்ள மில்லில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை வசந்த், அவரது மனைவி சூர்யா ஆகிய இருவரும் காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக அவர்களது  டூவீலரில் கலங்கல் கிராமத்திற்கு சென்று  கொண்டிருந்துள்ளனர்.கலங்கல் குட்டை அருகே வந்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு பின்னால் வந்த கார், வசந்த், சூர்யா சென்ற  டூவீலர் மீது பின்புறமாக பயங்கரமாக மோதியது. இதில் கீழே விழுந்த வசந்த்தை காரில் வந்த 3 பேர்  அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து உயிர் பிழைக்க வசந்த் ஓடியபோது அவரை துரத்தி துரத்தி வெட்டினர். ரத்த வெள்ளத்தில் வசந்த் கீழே விழுந்த நிலையில், அவரது மனைவி சூர்யா, காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டுள்ளார்.அப்பகுதியினர் ஓடி வருவதற்குள் காரில் வந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பி விட்டனர். தகவலறிந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதைய்யன் உதவி ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் அடங்கிய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வசந்த்தை  மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவத்தில், காயமின்றி தப்பிய  சூர்யாவிடம் போலீசார் விசாரித்தபோது தனது தந்தை தேனி மாவட்டம் உத்தம்பாளையம் எனவும், அங்கு இருந்தபோது கருப்புசாமி என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் , அந்த பழக்கத்தில் கருப்புசாமி தனக்கு கோழிப்பண்ணை வைத்து கொடுத்தார் எனவும்,  கருப்பசாமிக்கும் தனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.இது பற்றி தெரிந்து கொண்ட தனது கணவர் கருப்பசாமியை,  கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அரிவாளால்  தாக்கிவிட்டு குடும்பத்துடன் அப்பநாய்க்கன்பட்டி புதூர் வந்து மில்லில் தங்கி வேலை செய்து வந்ததாகவும், பழைய பகையில் தன்னையும், தன் கணவரையும் கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் எனவும் சூர்யா கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் தப்பியோடிய கருப்பசாமி சென்ற கார் மூணாறு செல்வதற்காக  திருப்பூர் மாவட்டம் அமராவதி காவல் நிலைய செக் போஸ்ட் வழியாக சென்றுள்ளது. அப்போது அங்கிருந்த காவலர்கள் கருப்புசாமி உள்பட 3 பேரை மடக்கி பிடித்ததாக  போலீசார் தரப்பில் தெரிவித்தனர்….

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது