களை தாவரங்களை அகற்ற கோரிக்கை

 

கோவை, ஜூலை 2: கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட வன மாவட்டங்களில் வனப்பகுதிகளில் களை தாவரங்களின் பெருக்கம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேண்டனா வகை களை தாவரங்கள் இருக்கிறது. 5 முதல் 10 சதவீத வனப்பகுதியில் இந்த களை தாவரங்கள் அடர்ந்து பரவியிருப்பதாகவும், மூலிகை தாவரங்களின் வளர்ச்சியை இந்த களை தாவரங்கள் அழித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இது தவிர, சீமை கருவேல், சீகை, நீலகிரி தைல மரம், சென்னா போன்ற களை தாவரங்களும் அதிகளவு பெருகி விட்டது. மண் வளத்தை கெடுக்கும் இதுபோன்ற தாவரங்கள் வன உயிரினங்கள் சாப்பிட்டால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த களை தாவரங்களை அகற்ற வனத்துறை நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோவை மண்டலத்தில் பரவலாக வளரும் அகில், வாகை, நொச்சி, மூங்கில், துளசி போன்ற தாவரங்களை வனத்தில் அதிகளவு நடவு செய்து வனப்பரப்பை அதிகரிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்