களைகட்டும் பொங்கல்..! ஜனவரி 16 ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் முதல்வர் பழனிசாமி

மதுரை: ஜனவரி 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கிவைத்து பார்வையிடுகின்றனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு பற்றி ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தின் பண்பாட்டு விழாக்களில் ஒன்றாக தைமாதத்து தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையோட்டி ஜனவரி 14 ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 15 ல் பாலமேட்டிலும், 16 ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்கனவே தமிழக முதல்வர் விதிமுறைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டார். ஜன.14ல் அவனியாபுரத்திலும், 15ல் பாலமேட்டிலும், 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, காளைகள் மற்றும் காளையர்கள் ஆயத்தமாகி வருகின்றன. இதனிடையே, அலங்காநல்லூரில் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். வாடிவாசல் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில், “வரும் 16-ந்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிட இருக்கின்றனர்,” எனக் கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது….

Related posts

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்