களைகட்டியது 2வது சீசன் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

 

ஊட்டி,செப்.25: நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்த சமயத்தில் ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வடமாநிலங்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் வருவார்கள். இம்மாத துவக்கத்தில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் ஓணம் பண்டிகை விடுமுறைக்கு பின் பரவலாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. அதன் பின் காலாண்டு தேர்வு காரணமாக சற்று குறைந்து காணப்பட்டது. தற்போது விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கடந்த வெள்ளிகிழமை முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. இதனால் இரண்டாவது சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. விடுமுறை தினமான நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்பட்டது. அதற்கேற்றார் போல் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா தளங்களை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டினார்கள்.பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட களைகட்டியிருந்தன. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை