களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்

களக்காடு, செப்.9: களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை, காந்திநகரை சேர்ந்தவர் அன்பு ரோஸ் மாணிக்கம் (67). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஈசாக் மகன் ஆனந்தராஜ் (45). இருவரும் நாய் வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆனந்தராஜ் வளர்த்து வரும் நாயை, அன்புரோஸ் மாணிக்கம் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தராஜ், அன்புரோஸ் மாணிக்கத்தின் நாயை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அன்புரோஸ் மாணிக்கம் நாயை தாக்கியது குறித்து தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், அன்புரோஸ் மாணிக்கத்தை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆனந்தராஜை தேடி வருகிறார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு