களக்காடு அருகே வாகனம் மோதி தொழிலாளி காயம்

களக்காடு: களக்காடு அருகே மாவடி, எம்.எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஆறுமுகபெருமாள் மகன் ஜெயக்குமார் (42). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று ஜெயக்குமார் கட்டிட வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். சாலைப்புதூர் இசக்கியம்மன் கோயில் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜெயக்குமார் சென்ற பைக் மீது மோதியது. இதில் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு