களக்காடு, ஜூன் 4: மாவடியில் நடந்த இந்து அன்னையர் முன்னணி புதிய கிளை கமிட்டி அமைப்பு கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். களக்காடு அருகேயுள்ள மாவடியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் புதிய கிளை கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது. இந்து முன்னணி கோட்ட தலைவர் தங்கமனோகர் தலைமை வகித்தார். இதில் இந்து அன்னையர் முன்னணி மாவட்டச் செயலாளர் பத்மா, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிதம்பரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.