கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் சிஇஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

 

கோவை, ஜூலை 13: கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். செந்தில்குமார் வரவேற்றார். சண்முகம், தர்மலிங்கம், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடிப்படை பணியாளர்கள் முதல் அமைச்சுப் பணியாளர்கள் வரை உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியிட மாறுதல் கேட்கும்போது பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் பிரிவு எழுத்தர்கள் சுயமாக சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதிப்படுத்திட வேண்டும். மாதம் ஒரு நாள் மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அலுவலர் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளர் அமைச்சு பணியாளர்களுக்கான எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அவரை இட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை