கல்வித்தரத்தில் முதலிடத்தில் உள்ள தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளியுங்கள்!: பிரதமர் மோடிக்கு, ஓ.பி.எஸ். கடிதம்..!!

சென்னை: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு ஓ.பன்னீர் செல்வம் எழுதியிருக்கும் கடிதத்தில் 2019 – 2020ம் ஆண்டு கல்வித்துறை அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் கல்வி அறிவு விகிதத்துறை வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த அறிக்கையின் படி இந்தியாவிலேயே கல்வித்தரத்தில் முதல் இடத்தில் உள்ள தமிழ்நாடு, A ++ கிரேட் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 
எனவே கல்வித் தரத்தில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பொது நுழைவு தேர்வுகளில் இருந்தும் விலக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டு மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு உகந்த வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை