கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க அரசு உத்தரவு

சென்னை: கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர்  கருப்பசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பினார்.  அதில் கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைப்பது,  தண்டிப்பது போன்ற புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இதுபோன்ற புகார்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களை வெளியே நிற்க வைப்பதாக புகார் எழுந்த நிலையில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற வில்லை,  பெற்றோர்களை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என உறுதி சான்றிதழ் வழங்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்க கூடாது,  கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுகின்றனவா? என்பது குறித்து உறுதிமொழி சான்று தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  ஒருவேளை சான்று தந்தும், அந்த பள்ளிகள் மீது ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை