கல்லூரி மாணவிகள் தீவிர தூய்மை பணி

சேலம், செப்.26: தூய்மை இந்தியா இயக்ககத்தின் ஒருபகுதியாக, ேசலம் அரசு அருங்காட்சியத்தில் தூய்மை பணி நேற்று நடந்தது. தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கிலும், வரலாற்று களங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாரதா மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிற்பங்கள், கல்வெட்டுகள், மரச்சிற்பங்கள், காட்சிக் கூடம் மற்றும் அருங்காட்சியகத்தின் சுற்றுப்புறங்களை மாணவிகள் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, பல்வேறு வரலாற்று சிற்பங்களையும், கல்வெட்டின் பெருமையையும் மாணவிகள் அறிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் உமாராணி, தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் ரம்யா நிரஞ்ஜனி மற்றும் சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லை அரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது