கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம்

ஆவடி: சென்னையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு இடையில் ‘ஈகோ’ பிரச்னை பல வருடங்களாக இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம்தேதி கல்லூரி திறக்கப்பட்டது. அன்றைய தினமே மேற்கண்ட இரு கல்லூரி மாணவர்களும் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்தனர். அப்போது, இரு கல்லூரி மாணவர்களும் வியாசர்பாடி ரயில் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையம் வந்த போது கல்லூரி மாணவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மதியம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக மின்சார ரயில் புறப்பட்டு வந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். அவர்களில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் நவீன், தனது புத்தகப்பையில் ஜல்லிக்கற்களை வைத்திருந்தார். இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படையினர், அவரை பிடித்து ஆவடி ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனை தெரிந்த சக மாணவர்கள் நவீனை விடுவிக்கும்படி போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், போலீசார் அவரை விடுவிக்க மறுத்துள்ளனர். இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்று மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஆவடி ரயில்வே போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் மாணவன் நவீனை விடுவித்தால்தான், போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக கூறினார். இதன் பிறகு, ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் பேசி மாணவன் நவீனை விடுவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை