கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு

ஆவடி: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி கல்லூரி கல்லூரி மாணவ – மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆவடி சட்டமன்ற தொகுதி சார்பில், வாக்காளர்கள் நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்களிக்க கோரியும் கல்லூரி மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆவடி தொகுதி தேர்தல் அதிகாரி பரமேஸ்வரி தலைமை தாங்கினார். 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பணம் வாங்காமல் நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்களிக்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், ஆவடி தாலுகா வட்டாட்சியர்கள் செல்வம், மணிகண்டன், ரேவதி, துணை வட்டாட்சியர்கள் நடராஜன், குமார், வருவாய் அலுவலர் சோனியா, கல்லூரி முதல்வர் கல்விக்கரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு