கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி

சிவகங்கை, ஜூன் 19: சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதுகலை வரலாறு மாணவர்களுக்கு கல்வி இடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகப் பணிகளில் ஒன்றாக கல்லூரி மாணவர்களுக்கு கல்வி இடைப் பயிற்சி வழங்கப்படுகிறது. சிவகங்கையில் வழங்கப்பட்ட பயிற்சியில் கல்வெட்டு அமைப்பு வாசித்தல், கல்வெட்டு தொடங்கும் முறை, அமைப்பு முறை, கல்வெட்டு செய்திகள், ஓம்படைக்கிளவி போன்றவைகள் படக்காட்சிகளுடன் விளக்கப்பட்டது. சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் காளிராசா பயிற்சி வழங்கினார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு