கல்லூரி சாலையில் தெரு விளக்குகளை சேதப்படுத்தும் கும்பல்

காரைக்குடி, பிப்.5: காரைக்குடி கல்லூரி சாலையில் தெருவிளக்குகள் எரியாததால் கோட்டையூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இருளில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பொறியியல் கல்லூரி, மத்திய மின் வேதியியல் ஆய்வகம், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி உள்பட தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர். தவிர கோட்டையூர், பாரி நகர், புதுவயல், கண்டனூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இச்சாலையை தான் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் விடுதிகள் இப்பகுதியில் உள்ளது. இப்பகுதி இலுப்பகுடி ஊராட்சி மற்றும் கோட்டையூர் பேருராட்சிக்கு உட்பட்டு வருகிறது. கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரி முதல் ஸ்ரீராம்நகர் கேட் வரை உள்ள பகுதியில் தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த லைட்டுகளை சமூக விரோதிகள் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இரவு நேரங்களில் டூவீலர்களில் கூட செல்ல முடியாத அளவில் உள்ளது. மிகவும் இருட்டாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் அச்சத்துடன் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இப்பகுதியில் மாணவிகள் விடுதிகள் உள்ள நிலையில் போதிய வெளிச்சமும் இல்லாததால் அசாம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. லைட் வெளிச்சம் இல்லாததால் குடிமகன்கள் கெட்டம் அடித்து வருகின்றனர் என பெதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் தெரு விளக்குகள் அமைத்து தரப்பட்டுள்ளது. குடிமகன்கள் சரக்கு அடிக்க விளக்குகள் தடையாக உள்ளதால் அதனை உடைத்து விடுகின்றனர். எனவே இரவு ரோந்து செல்லும் போலீசார் இப்பகுதியில் தெருவிளக்குகளை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி

வத்தலக்குண்டு பள்ளிகள் முன்பு வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை

திருமலைக்கேணி கார்த்திகை விழா