கல்லூரி கருத்தரங்கம்

தேனி, அக். 28: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லூரிசெயலாளர் மகேஸ்வரன், இணை செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். இயந்திரவியல் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். இதில் மதுரை கிரீன்ஸ்கார்ட் நிறுவனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு ஸ்டார்அப் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். இதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர். முடிவில் தொழில்முனைவோர் மேம்பாட்டு செல்லின் ஒருங்கிணைப்பாளர் சுருளிமணி நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை