கல்குவாரியில் மூழ்கி ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரப்பூண்டி ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கிராவல் குவாரி அமைக்கப்பட்டது. இந்த குவாரி  சுமார் 10 அடி ஆழம் முதல் 25 அடி ஆழம் வரை கனிமவளம் திருடப்பட்டது. அரசு அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்ற இந்த குவாரி பள்ளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக மழைநீர் நிரம்பி உள்ளது. அந்த நீரில் குளிப்பதற்காக சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 4 நண்பர்கள் அங்கு வந்தனர்.  அங்கு சமையல் செய்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 4 பேரும் நீரில் இறங்கி குளித்தனர். அதில் ஒருவர் மட்டும் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முடியாமல் உடனே சக நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிரிவேடு போலீசார் உடலை  மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  மேலும்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இறந்தவர் மாநெல்லூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத் (35) என்பது தெரியவந்தது….

Related posts

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது