கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு கவுன்சிலிங்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு கலை கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, 12ம் வகுப்பு முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகளில் சேர இந்தாண்டு ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி இசிஆர் சாலையில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு நேற்று கவுன்சிலிங் நடந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள், தாங்கள் விரும்பிய பாட பிரிவுகளை தேர்வு செய்தனர். அப்போது, கல்லூரி வளாகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இன்று இக்கல்லூரியில் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி