கலையுணர்வும், கலை ஆர்வமும் புத்தாக்க சிந்தனையை தரவல்லது-கலெக்டர் கவிதாராமு பாராட்டு

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் உள்ள வேளாண் கல்லூரியில், கலை-இலக்கிய மாணவர் மன்றம் தொடக்கவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.விழாவில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பேசியது: அகில இந்திய ஆட்சி பணி எனக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நடனமும் மற்றும் அது சார்ந்த கலைகளும் என்றார். மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையேயும், என்னை புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்வுடன் செயல்படுவதற்கும் எனது கலை-இலக்கிய ஈடுபாடே காரணம். ஆகவேதான், கலை இலக்கியத்துக்கென மாணவர் மன்றத்தினையும், மாணவர்களையும் பார்க்கும் போது எனக்கு என்னுடைய கல்லூரி ஞாபகம் வருகிறது. கல்வியினைத் தாண்டிய பரந்துபட்ட சிந்தனையினை மாணவர்களிடையே உருவாக்க முனைப்பு காட்டும் நிர்வாகத்தை மனமார பாராட்டுகிறேன். வாழ்க்கைக்குத் தேவையான, பேச்சுத் திறன், சமூக ஈடுபாடு, தலைமை பண்பு, பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் மனபாங்கினை வளர்த்தல் மற்றும் நமது அன்றாட மன அழுத்ததில் இருந்து விடுபடுவதற்கான உத்திகளையும் செயல்முறைகளையும் கலை இலக்கிய ஈடுபாடு அளிக்கவல்லது, அதற்கு தானே ஒரு உதாரணம். மேலும் மாணவர்களை, இத்தகைய மன்றத்தின் முக்கியத்துவத்தினை புரிந்துகொண்டு, ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றார்.இதனை தொடர்ந்து கல்லூரி குடிமிகாம் என்ற மாணவர் மன்ற ஆண்டிதழின் பெயரினை மாணவர்கள் மத்தியில் அறிவித்தார். குடியரசு தின விழா போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தினங்களில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாரட்டுச் சான்றிதழையும் வழங்கினார். தொடர்ந்து, மாணவர் மன்ற செயலர்களாக ராஜா,விக்னேஷ், லவல்ஜாய், துணை செயலர்களாக கபிலன், செல்வி. நவீனா, விளையாட்டு மன்ற செயலர்களாக கவியரசு, செல்வி நந்தினி, துணை செயலர்களாக வினோத், கவிப்பிரியா பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர்.கீதா வரவேற்றார். கல்லூரியின் துறைத்தலைவர்கள், முனைவர் நளினி, முனைவர் மாரிமுத்து, முனைவர் கிறிஸ்டி நிர்மலா மேரி, முனைவர் சாந்தா வாழ்த்துரை வழங்கினர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி