கலைஞர் பிறந்தநாளையொட்டி களைகட்டிய சேவல் சண்டை: தர்மாபுரியில் நடந்தது

 

தேனி, ஜூலை 17:கலைஞர் 100வது பிறந்த நாளையொட்டி, தேனி வடக்கு ஒன்றிய திமுக மற்றும் மானப்பறவை நண்பர்கள் குழு இணைந்து தேனி அருகே தர்மாபுரி கிராமத்தில் முதலாம் ஆண்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நேற்று நடந்தது. இப்போட்டிகளை தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் தேனி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரத்தினசபாபதி, தேனி வடக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் ராம்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ், தேனி வடக்கு ஒன்றிய திமுக தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜெகதீசன், தேனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இப்போட்டிகளில் தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோயமுத்தூர், தஞ்சாவூர், சென்னை மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சுமார் 196 சண்டை சேவல்கள் 98 ஜோடிகளாக போட்டிகளில் கலந்து கொண்டன. சேவல் சண்டையை காண தேனி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் விளையாட்டு மைதானத்தில் திரண்டிருந்ததால் போட்டி மைதானம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இப்போட்டியில் கம்பம் பாண்டீஸ்வரன் சேவலுக்கு ஒரு பவுன் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பாக போட்டியிட்ட இதர சேவல்களுக்கு சிறப்பு பரிசுகளான குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை