கலைஞர் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்கள் இடையே பேச்சு போட்டி

சென்னை: கலைஞர் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்கள் இடையே பேச்சு போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி துறைக்கான 2021-2022ம் ஆண்டு மானிய கோரிக்கையில் “நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம்  கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி  மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 2022-23ம் ஆண்டிற்கு கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று (3ம் தேதி) கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சு போட்டி நடைபெற உள்ளது. பேச்சு போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். அதன்படி வடசென்னையில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரி, தென்சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரி, மத்திய சென்னையில் பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் போட்டி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது