கலைஞர் நூற்றாண்டு விழா மாணவர்களுக்கு போட்டிகளை அமைச்சர் துவங்கி வைத்தார்

 

ஈரோடு, அக்.9: கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பள்ளி மாணவர்கள் பங்குபெறும் கலைஞரின் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் ஈரோடு, தெற்கு மாவட்ட திமுக. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற போட்டிக்கு மாநகரச் செயலாளர் மு சுப்ரமணியம் தலைமை வகித்தார். ஈரோடு, திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி முன்னிலை வைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

கலை, இலக்கியப்பேரவை மாவட்ட அமைப்பாளர் சித்தோடு பிரகாஷ் வரவேற்றார். இதில், திமுக தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இளைய கோபால், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் செங்கோட்டையன், குணசேகரன், கே.பி.சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
9 முதல் 12ம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 25,000 ரூபாய், இரண்டாவது பரிசாக 15,000 ரூபாய், மூன்றாவது பரிசாக 10,000 ரூபாயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் ஈரோடு, கருங்கல்பாளையம், மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷ.சாந்தினி, 42 கவிதைகள் ஒப்பித்து முதலிடத்தையும், கஸ்பாபேட்டை அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி சந்தியா 61 வசனங்களை ஒப்பித்து 2-ம் இடத்தையும், கருங்கல்பாளையம், மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவி மா.மஹாலட்சுமி 59 வசனங்களை ஒப்பித்து 3-ம் இடத்தையும் பெற்றனர். திங்களூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் நிதுன் ஆகாஷ் 32 வசனங்களை ஒப்பித்து ஆறுதல் பரிசையும் வென்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை