கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏரலில் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, வசனம் ஒப்புவித்தல் போட்டி

ஏரல், அக்.8: ஏரலில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கவிதை மற்றும் வசனம் ஒப்பிவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலைஞரின் கவிதை, வசனம் ஒப்பித்தல் போட்டி ஏரலில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசினார்.

வைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூர் கழக செயலாளர் ராயப்பன், ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்கள் மகேஷ், மாரியப்பன், முத்துராமலிங்கம், ஜெஹாங்கீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் துறைமுகம் ராமசாமி வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைச்செல்வம், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட்செல்வின், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம்,

மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜான்பாண்டியன், பகுதி செயலாளர்கள் தூத்துக்குடி இந்திராநகர் சிவக்குமார், ஸ்பிக்நகர் ஆஸ்கர், துணைச்செயலாளர் மகேஸ்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சதீஸ்குமார், நவீன், இளங்கோ, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், இலக்கிய தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், அரசு வழக்கறிஞர் பூமிநாதன், சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், நகர மாணவரனி அமைப்பாளர் எபநேசர் பாக்கியசீலன், ஏரல் முன்னாள் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரி, ஜவ்பர்சாதிக், மொட்டத்தாதன்விளை கிளை செயலாளர் சிவலிங்கம்,

ஒன்றிய துணைச் செயலாளர்கள் சண்முகராஜா, ராமசுப்பிரமணியன், கிளை செயலாளர்கள் பழையகாயல் ஜாண்சன், சிறுத்தொண்டநல்லூர் காஜாமுகைதீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கொற்கைமாறன், தொண்டரணி கார்த்தீசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரபாகரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அனஸ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி செந்தில் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் எட்வர்ட், முன்னாள் ஏரல் இளைஞரணி அமைப்பாளர் முகம்மது பஹ்மி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணை அமைப்பாளர் பொன்ராஜ் நன்றி கூறினார். இப்போட்டியில் நடுவர்களாக ஆசிரியர்கள் பால்ராஜேந்திரன், செய்யதுரபீக் மற்றும் தூத்துக்குடி இளம்முருகு ஆகியோர் செயல்பட்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை