கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தொழிற்பேட்டை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

 

காஞ்சிபுரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை வளாகத்தில் 2,750 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 130 தொழிற்பேட்டைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், தொழிற்பேட்டைகளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை வளாகத்தில் 2,750 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மரக்கன்றினை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குநர் மதுமதி, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி