கலைஞர் நினைவிட கட்டுமான பணிகளை 6 மாதத்துக்குள் முடிக்க திட்டம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரம்

சென்னை: கலைஞர் நினைவிட கட்டுமான பணிகளை 6 மாதத்தில் முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஒப்பந்த நிறுவனம் மூலம் முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை வருங்கால தலைமுறை அறியக்கூடிய வகையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 24ல் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கலை, இலக்கியம், அரசியல் முத்திரை பதித்ததின் அடையாளமாக கலைஞர் நினைவிடத்தில் மூன்று வளைவுகள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28ம் தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து நினைவிடத்தில் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஆரம்பகட்ட பணிகளை கடந்த ஜூன் 12ம் தேதி பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக நினைவிட வளாகத்தில் பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து, தகரம் மூலம் செட் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நினைவிடத்தை சுற்றியுள்ள பகுதிகள் சமதளமாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து, நினைவிட கட்டுமான பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படுகிறது. இப்பணிகள் 9 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று டெண்டரில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், இப்பணிகளை 6 மாதத்தில் முடிக்க பொதுப்பணித்துறை இலக்கு வைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கலைஞர் நினைவிடத்தில் முதற்கட்டமாக கிரானைட் கல் பதிக்கப்பட்டு படிக்கட்டுகள் மற்றும் தரைதளம் அமைக்கப்படுகிறது. உதயசூரியன் முகப்பில் இருப்பது போன்றும், நினைவிட எதிரில் பேனா வடிவில் தூண் அமைக்கப்படுகிறது. தொடர்ந்து திறந்தவெளி காட்சியரங்கம், அருங்காட்சியகமும் தனித்தனியாக பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது’ என்றார்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை