கலைஞர் குறித்த பேச்சு போட்டியில் ராமசமுத்திரம் அரசு பள்ளி மாணவி மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்தார்

தொட்டியம், ஆக.22: தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடந்த கலைஞர் குறித்த பேச்சுப்போட்டியில் தொட்டியம் ராமசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி கனிஷ்கா மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்க தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறித்து திருச்சி புத்தூர் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில், தொட்டியம் ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி கனிஷ்கா இரண்டாம் இடத்தைப் பெற்று காசோலையாக ரூ.3,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றார். தொட்டியம் வட்டாரக் கல்வி அலுவலர் சேகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், வழிகாட்டி ஆசிரியர் ராஜா, மற்றும் உதவி ஆசிரியர்களான மணிமேகலை, அகிலா, செல்வம், ராஜம்மாள், கவிதா, பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளியின் முன்னாள் இந்நாள் மாணவர்கள் ஆகியோர் மாணவிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு