Sunday, October 6, 2024
Home » கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்வி நிதியாக8 பேருக்கு தலா 25,000

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்வி நிதியாக8 பேருக்கு தலா 25,000

by kannappan

சென்னை: திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.  2021, மே மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

nineteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi