கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிப்ரவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் ரூபாயை நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்திராணி, கமலா, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துராணி, மகாலிங்கம், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆரிப்சேட், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்ராஜ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேக்முகம்மது ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் 2 லட்சம் ரூபாயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை