கலைஞரின் 4-வது நினைவு நாளை முன்னிட்டு 43 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் மாரத்தான் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார்

சென்னை: கலைஞரின் 4வது நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பரிசு வழங்கி சிறப்பித்தார். கலைஞரின் 4வது நினைவு நாளை முன்னிட்டு, நேற்று பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இம்மாராத்தான் போட்டிக்கான 5 கி.மீ., தூரப் போட்டியை தி.மு.கழக இளைஞர் அணி செயலாளரும் , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் , 10 கி.மீ., போட்டியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு , 21 கி.மீ., போட்டியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , போட்டியை 42 கி.மீ., விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43,320 பேர் பதிவு செய்து கலந்துகொண்டனர். இதில் 10,985 பேர் பெண்கள். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட 1,20,69,980 தொகையை தமிழக சுகாதாரத்துறை செயலாளரிடம் தமிழக முதல்வர் ஒப்படைத்தார். தொகை முழுவதையும், எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, ஏழைக் குழந்தைகளின் மருத்துவப் பயன்பாட்டிற்காக இந்நிதி செலவிடப்படும். இம்மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும், மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளை முதலல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக சைதாப்பேட்டையில் நிறுவ உள்ள கலைஞரின் வெண்கல சிலையை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்து மாலை அணிவித்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய நினைவு மாரத்தானாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’நிறுவனம் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினர். மேலும் 5 கி.மீ., மாரத்தான் போட்டியில் முதல் பரிசு பெற்ற மணிசரத்துக்கு 25,000 மும், இரண்டாவது பரிசு பெற்ற தினேஷ் க்கு 15,000மும், 10 கி.மீ., போட்டியில் முதல் பரிசு பெற்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு 50,000மும், இரண்டாவது பரிசு பெற்ற உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்த்குமாருக்கு 25,000மும், மூன்றாவது பரிசு பெற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பால்க்கு 15,000 மும், 21 கி.மீ, போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமன் கோவிந்த்க்கு 1,00,000 மும், இரண்டாவது பரிசு பெற்ற தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் ராஜ்குமாருக்கு 50,000 மும், மூன்றாவது பரிசு பெற்ற உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகருக்கு 25,000 மும், 42 கி.மீ., போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் ஷேர்சிங்க்கு 1,00,000 மும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்ற 12 பெண்களுக்கு சிறப்பு பரிசாக தலா 5000 வீதம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., இரண்டு கண் பார்வையிழந்த பஞ்சாபை சேர்ந்த வீரர் சாவ்லா ஆகியோர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு செய்து சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி ,ரகுபதி, பெரியகருப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், கணபதி, அரவிந்த் ரமேஷ்,ஏ.எம்.வி.பிரபாகரராஜா,உள்ளிட்டோர் பங்கேற்றனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்