கலெக்டர் தலைமையில் மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் ஆலோசனை கூட்டம்

மாமல்லபுரம்: உலக நாடுகள் பங்கேற்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி, தமிழகத்தின் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் வரும் ஜூலை இறுதியில் தொடங்கி, ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடக்க உள்ளது. சுமார், 150 நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில், இந்தாண்டு நடைபெற இருந்தது. தற்போது உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடப்பதால், உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் முடிவை ரஷ்யா கைவிட்டது. பல்வேறு நாடுகளில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக கடும் போட்டி நிலவியது. ஆனால், தமிழகத்தின் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோடு இசிஆர்., சாலையொட்டி உள்ள போர் பாயின்ட் தனியார் ரிசார்ட்டில் இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் பங்ககேற்பதற்காக, மாமல்லபுரம் வந்து தங்கும் வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிலம் எடுப்பு டிஆர்ஓ நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், ஆர்டிஓ விஷ்ணுபிரியா, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், செல்வமூர்த்தி மற்றும் 30 ஓட்டல் நிர்வாகத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில், 150 நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் வர உள்ளனர். இதற்கான, முன்னேற்பாடு வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை 2,500 அறைகளை முன்பதிவு செய்துள்ளோம். வருகைக்கு ஏற்றவாறு, மேலும் அறைகளை முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது’ என்றார். …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை