கலெக்டர் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

 

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பனையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது கள்ளச்சாராயம் மதுபானங்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டுவரும் நபர்கள் மட்டுமல்லாமல் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சந்துக்கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் அது எந்த கடையில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்பட்டதோ அந்தக் கடையின் விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகளை தீவிர படுத்தி அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டு போதைக்கு பொருட்கள் வருவதை கண்டறிய காவல்துறை கலால் பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை கலெக்டர் (சபாதி) கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் (திருவள்ளூர்) ஏ.கற்பகம், (திருத்தணி) தீபா, மண்டல மேலாளர் டாஸ்மாக் (கிழக்கு, மேற்கு) ரேணுகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி