கலெக்டர் கடும் எச்சரிக்கை தகவலறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

கரூர்: கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரகங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது தகவல்களை பெறுவதற்கு மட்டுமல்ல மக்களின் குறைகளை களைவதற்கு ஒரு நுழைவு வாயிலாக அமைகிறது என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏறபடுத்தும் மாரத்தான் போட்டி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 200 நபர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கி தாந்தோணி அரசுக் கலைக் கல்லூரி வரை சென்று நிறைவடைந்தது. இதில், நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, தாசில்தார்கள் நேரு, வெங்கடேஷன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை