கலெக்டர் அலுவலக நடைபாதையில் புதர் செடிகள் அகற்றம்

ஊட்டி, ஆக.3: ஊட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் நடைபாதையில் வளர்ந்துள்ள புதர் செடிகளை உடனடியாக அகற்றப்பட்டது. ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நாள் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக, சேரிங்கிராஸ் பஸ் நிலையம் பகுதியில் இருந்தே பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்துச் செல்கின்றனர். இதனால், இந்த சாலையோரத்தில் சேரிங்கிராஸ் முதல் கலெக்டர் அலுவலகம் வரை கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதையில் டிபிஓ சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் வரை உள்ள நடைபாதையில் முட்புதர்கள் வளர்ந்திருந்தது. இதனால், இந்த நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, கலெக்டர் அலுவலகம் செல்லும் நடைபாதையில் வளர்ந்துள்ள முட்புதர்களை நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, நேற்று ஊட்டி நகராட்சி ஊழியர்கள் இந்த நடைபாதையில் வளர்ந்திருந்த முட்புதர்களை அகற்றினர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை