கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

ஈரோடு, ஜூன் 22:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை தவிர இதர பணிகளில் ஈடுபடுத்த கூடாது, செவிலியர்களை கணினி பதிவு செய்யும் பணிக்கு உட்படுத்துவதை கைவிட வேண்டும், ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல பெண் சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பாலின பாகுபாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெற்றிசெல்வி தலைமை தாங்கினார். செயலாளர் வித்யாதேவி, பொருளாளர் தவ்ஹீத் ஆகியோர் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு