கலெக்டர் அலுவலகத்தில் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி

 

திருப்பூர், டிச.20: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் உற்பத்தி செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமண், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மதுமிதா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி மற்றும் மேலாளர் நித்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் பாக்கு மட்டை தட்டு, சணல் பைகள், காட்டன் பைகள், ஆர்கானிக் பொருட்கள், கால் மிதியடிகள், பேப்பர் தட்டுகள், அகர்பத்திகள், சாம்புராணி, பட்டு சேலைகள் மற்றும் பல கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இதன் விற்பனையும் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்