கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண் மயங்கி விழுந்தார்

 

நாகப்பட்டினம்,ஆக.31: நாகப்பட்டினம் அருகே வடகுடி பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி (40) மாற்றுத்திறனாளி. இவர் நேற்று கடனுதவி கோரி விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் படிஏறியபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் காவல்நிலைய பெண் போலீசார், தனலெட்சுமியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். நீண்ட நேரத்துக்கு பின்னர் தனலெட்சுமிக்கு மயக்கம் தெளிந்து. மாற்றுத்திறனாளிகள் நல துறை அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்