கலெக்டர் அறிவுறுத்தல் கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆலை கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கந்தர்வகோட்டை, ஜூலை9: கந்தர்வகோட்டை பகுதியில் ஆவை கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மற்றும் ஆதனக்கோட்டை, பெருங்களூர் பகுதிகளில் விவசாயிகள் தீவிர விவசாயம் செய்து வருகிறனர். தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்து நடவு செய்து வருகிறார்கள். கரும்பு விவசாயதை பொறுத்தவரை ஆலை நிர்வாகம் நடவு முதல் வெட்டு வரை கண்காணித்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் வட்டியில்லா கடன் கொடுத்து உதவி செய்வதால் இப்பகுதி விவசாயிகள் கரும்பு விவசாபம் செய்து வருகிறார்கள்.

ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து கரும்பினை டன் ஒன்று 3365 ரூபாய் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து கொண்டுஅதற்கு உரிய தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு செய்வதால் விவசாயிகள் கரும்பு பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். விவசாயிகள் கூறும்போது, கரும்பு ஆண்டு பயிர் எனவும் பாராமரிப்பு செலவு அதிக அளவில் ஆவதால் அரசு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கரும்பு உரிய ஊக்க தொகையை உடனுக்குடன் கொடுக்க வேண்டும்எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்சமயம் இப்பகுதியில் கரும்பு நடவு நடைபெற்று வருகிறது.

Related posts

முசிறி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட 480 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

தா.பேட்டை பகுதியில் இன்று மின்நிறுத்தம்

ஜூலை 26ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்